கோவை மாவட்டம் எல்என்டி பைபாஸ் சாலையில் சனிக்கிழமை இரவு 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, லாரிகளை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.