திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணிக்கு கோவை சாரதாவுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் பின்னணியில், இருவரிடையே ஏற்பட்ட தகராறின் போது, சாரதா தனது உறவினர்கள் மற்றும் கூலிப்படை உதவியுடன் சிகாமணியை கொலை செய்ததாக தெரியவந்தது.
தூக்க மாத்திரை கலந்து கொலை செய்யப்பட்ட சிகாமணியின் உடல் கரூரில் காட்டுப் பகுதியில் வீசப்பட்டது. சம்பவத்தில் சாரதா, அவரது தாய் கோமதி, அக்கா நிலா, உறவினர் சுவாதி, கூலிப்படையைச் சேர்ந்த புதியவன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கைதான ஆறு பேரையும் மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
போலீசார் தற்போது கொலையில் தொடர்புடையவர்களைக் கண்டறியும் நோக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர்.