கோவை: சிறுவனை இழுத்துச் சென்ற புலி

வால்பாறை அருகே மளுக்கப்பாறை பகுதியில், குடிலில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் ராகுல் மீது புலி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பேபியுடன் குடிலில் தூங்கிய சிறுவனை, இன்று அதிகாலை 2.15 மணி அளவில் குடிலுக்குள் புகுந்த புலி தலையை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு விழித்த பெற்றோர், புலியை பார்த்ததும் அது சிறுவனை விட்டு காட்டிற்குள் ஓடியது. காயம் அடைந்த சிறுவன் முதலில் மளுக்கப்பாறை டாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் சாலக்குடி தாலுக்கா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். சம்பவம் தொடர்பாக வனத்துறையும், காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குடில்களில் தூங்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி