கோவை: கடன் கொடுத்தவர் மீது பரபரப்பு புகார்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், தனது நிலத்தை அபகரிக்க முயற்சி நடப்பதாகவும், அதிக வட்டிக்குக் கடன் வழங்கும் சந்திரசேகர் என்பவர் குடும்பத்தினருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார். விவசாயச் செலவுகளுக்காக சில ஆண்டுகளுக்கு முன் சந்திரசேகரிடம் ரூ. 24 லட்சம் கடன் பெற்று, நில ஆவணங்களை பிணையாக அளித்ததாகவும், பின்னர் தனது தொழிலுக்காக ஒரு சொத்தை விற்றதாகவும் பன்னீர்செல்வத்தின் மருமகன் லிங்கப்பசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி