ஒவ்வொரு மதமும், அந்தந்த மதங்களுக்கான சொத்துக்களை, அம்மதம் சார்ந்த நிர்வாகக் குழுக்களைக் கொண்டே நிர்வகித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமிய சமூகத்தின் வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பதற்கு, அமைக்கப்பட இருக்கும் குழுக்களில், வக்ஃபு குழுக்களில் அல்லது, வக்ஃபு வாரியத்தில், இஸ்லாமியர் அல்லாதவர்களை உறுப்பினராக நியமிப்பதற்கு, ஏதுவாக சட்டத்தை இயற்றியிருக்கிறது பாஜக அரசு. இது ஒரு அடாவடித்தனமான அரசியல் ஆகும். இந்த பாசிச தாக்குதலை சட்டப்படியே இந்த அரசு அரங்கேற்றி இருப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின், இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் நடவடிக்கையாக இருக்கும். இந்தியா முழுவதும் பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்கிற வேண்டுகோளை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன் வைக்கிறது என கூறினார்.