கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொண்டாமுத்தூர் எம்எல்ஏ வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் அனுதாபம் தெரிவிப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.