இந்த அரிய வகை மலரை நேரில் காணும் வாய்ப்பு கடினமெனும் கருத்துக்கு மத்தியில், இப்பூவின் மலர்ச்சி அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பூவின் வண்ணமும், வாசனையும், அதனுடைய சிறப்புமிக்க உருவும் நள்ளிரவில் மலர்வதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வை பார்வையிட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள் வரிசையாக வந்து புகைப்படங்களையும் எடுத்து ரசித்துச் சென்றனர்.
இந்த அரிய நிகழ்வு குறித்து செந்தில் பிரபு தெரிவித்ததாவது, பொதுவாக இதுபோன்ற பூ பூப்பது நமக்கு ஒரு பாக்கியமாகவே உணர்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை போக்கும் பிரம்ம கமலம் இந்த முறை எங்கள் வீட்டில் பூத்துக்குலுங்குகிறது. இதனைப் பார்ப்பதற்காக மக்கள் வந்து ஆர்வமாக பார்த்துச் செல்கிறார்கள் எனக் கூறினார்.