கோவை கருமத்தம்பட்டி பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், மதுரை அணைக்காரப்பட்டியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். கட்டிட வேலைக்காக கோவைக்கு வந்திருந்த இந்தச் சிறுவனுக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக்கொண்ட சிறுவன், மாணவிக்கு ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கருமத்தம்பட்டி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட சிறுவனைக் கைது செய்தனர்.