கோவை பன்னிமடை பகுதியில், காட்டில் இருந்து வழிதவறி வந்த மானை தெருநாய்கள் சுற்றி வளைத்து துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மான் அப்பகுதியில் அங்கும் இங்கும் ஓடியது. இறுதியில், மானை விடாப்பிடியாக துரத்திக்கொண்டு நாய்கள் வனத்திற்குள் ஓடிவிட்டன. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.