கோவை: சிறுவாணி நீர் மட்டம் குறைவு

கோவை குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணையில், அணைத்திறப்பு காரணமாக நீர் மட்டம் 40 அடியாக குறைந்தது. கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அணையை, அந்நாட்டு நீர்ப்பாசனத்துறை பராமரித்து வருகிறது. 

அணையின் பாதுகாப்புக்காக அதிகபட்சம் 44.61 அடி வரைதான் தண்ணீர் தேக்கப்படுகிறதாம். கடந்த 15ம் தேதி 40.70 அடி இருந்த நீர் மட்டம், மழையால் 26ம் தேதி 43.89 அடி வரை உயர்ந்தது. இதையடுத்து மதகு திறக்கப்பட்டதால், 29ம் தேதியுடன் நீர் மட்டம் 40 அடியாக குறைந்தது. 

மொத்தம் 4 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், எதிர்காலத்தில் முழு கொள்ளளவு நீர் தேக்கி கோடையில் நீர்தட்டுப்பாட்டை தவிர்க்க, சிறுவாணி அணையில் கசிவுகள் ஏற்படும் பகுதிகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி