கோவை: தயார் நிலையில் உள்ள மீட்புப் படையினர்

கோவை மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 26 பேர் மற்றும் மாநில மீட்புப் படையின் 54 பேர் என மொத்தம் 80 பேர் கோவைக்கு இன்றும் வருகை தந்துள்ளனர். இவர்கள் வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மழை அதிகமுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். 

தொண்டாமுத்தூரில் ஒரு குழு தயார் நிலையில் இருக்கிறது. முன்னதாக, மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் 8-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து, 2 முதியவர்கள் காயமடைந்தனர். மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில், வானிலை மையம் மழை, இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. நிவாரண முகாம்கள், மண்சரிவு தடுப்பு உபகரணங்கள், பாக்லைன், மின்சார வெட்டும் கருவிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. 

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் முழுமையான தயார்நிலையில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி