மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (டிச.2) தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.