கோவை: போஸ்டர் சர்ச்சை.. பாஜக இளைஞரணியினர் கைது

கோவை நகரில் மத்திய பட்ஜெட் 2026-ஐ விமர்சித்து தி.மு.க சார்பில் ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி தி.மு.க வினர் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அவதூறு தன்மை கொண்டவை எனக் கூறி பா.ஜ.க இளைஞர் அணியினர் சில போஸ்டர்களை கிழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி