கோவை: பெயிண்டர் விழுந்து படுகாயம்; 2 பேர் மீது வழக்கு

கோவை குனியமுத்தூர் சாரல் நகரில் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பாலு (58) என்பவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பாலுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாகக் கூறி, குனியமுத்தூர் போலீசார் அப்துல்காதர் மற்றும் கோபி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி