சேரன்மாநகரைச் சேர்ந்த நியாஸ் அகமது, பெங்களூருவிலிருந்து தனியார் பஸ் பார்சல் சேவை மூலம் கோவைக்கு அனுப்பிய ரூ. 20,600 மதிப்புள்ள 14 பர்தா துணிகள் தீ விபத்தில் சேதமடைந்ததாக நிறுவனம் தெரிவித்தது. பார்சல் வழங்கப்படாததால், நியாஸ் அகமது கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தட்சணாமூர்த்தி மற்றும் உறுப்பினர் சுகுணா, சம்பந்தப்பட்ட பார்சல் நிறுவனத்திற்கு ரூ. 20,600 பொருள் இழப்பீடு, ரூ. 20,000 மனஉளைச்சல் இழப்பீடு மற்றும் ரூ. 10,000 கோர்ட்டு செலவாக மொத்தம் ரூ. 50,600 வழங்க உத்தரவிட்டனர்.