கோவை: சத்துணவு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தேக்க நிலை ஊதியம், பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அலுவலகத்தில் நேற்று இரவு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் செல்லதுரை, பொது செயலாளர் ஜெசி, துணை செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடர முடிவு செய்துள்ளனர். முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி கூறுகையில், 2019 முதல் 2023 வரை பிற மாவட்டங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி மாறுதல், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் கோவையில் மட்டும் இது நிறைவேற்றப்படவில்லை. கடந்த மாதம் 17-ந்தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தும் இதுவரை செயல்படவில்லை என்றார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் போராட்டம் தொடர்ந்தது.

தொடர்புடைய செய்தி