கோவை: விமான நிலையத்தில் புதிய வசதிகள்

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான புதிய வசதிகள் இன்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சர் முரளிதர் மோகல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரால் துவக்கி வைக்கப்படுகின்றன. செய்தியாளர் சந்திப்பில் விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிஃப் கூறுகையில், கோவை விமான நிலையத்தில் தினமும் 28 முதல் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. IndiGo, Air India, Air Vistara போன்ற நிறுவனங்கள் சேவை வழங்குகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூர், அகமதாபாத், சிங்கப்பூர், சார்ஜா போன்ற நகரங்களுக்கு விமான சேவை உள்ளது. பயணிகளின் வசதிக்காக மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் ‘Udaan Yatri Cafe’, மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஜி. ஐ. டேக் பெற்ற தயாரிப்புகள் விற்பனை நிலையம் (குறிப்பாக கோவை கோரா காட்டன்), குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி மற்றும் லைப்ரரி வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மேற்கு தமிழகத்தின் முக்கிய விமான நிலையமான கோவையில் மேற்கொள்ளப்படும் இந்த வசதிகள் பயணிகளுக்கு கூடுதல் சௌகரியத்தை வழங்கும்.

தொடர்புடைய செய்தி