கோவை மாவட்டம் பேரூர் வட்டம், முருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டு உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் திறப்பில், நிரந்தர உண்டியல், கோசாலை உண்டியல், திருப்பணி உண்டியல் ஆகியவற்றின் வருவாய் அறிவிக்கப்பட்டது. நிரந்தர உண்டியலில் ரூ. 80,02,563, கோசாலை உண்டியலில் ரூ. 3,16,435, திருப்பணி உண்டியலில் ரூ. 1,29,489 வருவாய் கிடைத்துள்ளது. மேலும், 43 கிராம் தங்கம், 6 கிலோ 811 கிராம் வெள்ளி, 18 கிலோ 175 கிராம் பித்தளை காணிக்கையாக வந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.