கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், வெள்ளக்கிணறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கான வசதிகள், சுகாதாரப் பராமரிப்பு பணிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடி கேட்டறிந்தார். தூய்மை, குடிநீர், கழிப்பறை பராமரிப்பு, மருத்துவக் கழிவு அகற்றும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்க அவர் அறிவுறுத்தினார்.