கோவை: மகா சிவராத்திரி.. ஸ்தம்பித்த வெள்ளியங்கிரி மலை

கோவை அருகே உள்ள தென்கயிலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான சிவபக்தர்கள் திரண்டனர். உலகம் முழுவதும் சிவராத்திரி கொண்டாடப்பட்ட நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி மலையில் எழுந்தருளியுள்ள சுயம்பு லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அலைமோதினர். வழக்கத்தை விட பல மடங்கு அதிகமான பக்தர்கள், ஏழு மலைகளையும் கடந்து மலை உச்சியை அடைந்து ஈசனை தரிசித்தனர்..

தொடர்புடைய செய்தி