கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த குற்றத்திற்காக 23 வயதுடைய அஜய் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறப்பு சோதனையின் போது இவர் பிடிபட்டார். அவரிடமிருந்து சுமார் 1314 பிராண்டி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.