கோவை: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில், மது அருந்துவதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவி தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திக் கொன்ற ஜெயச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். மது அருந்தி வீட்டிற்கு வந்த ஜெயச்சந்திரன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ஆத்திரத்தில் சமையலறை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மகனுக்கு தகவல் தெரிவித்த ஜெயச்சந்திரனை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி