கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் இன்று அனுமதி வழங்கினார். 5 நாட்கள் காவல் கோரி போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 3 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட இருவரும், விசாரணைக்காக தனித்தனி வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.