கோவை இடையர்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர். இடையர்பாளையம் சிவாஜி காலனியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கவுண்டம்பாளையம் போலீசார் அதிரடியாகச் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர். அந்த நேரத்தில் அங்கு 6 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பரமசிவம் (62), சதானந்தம் (62), பெரியசாமி (52) ஆகியோர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 18,000 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மக்களுக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.