கோவை: தொழிலதிபர் மீது மோசடி வழக்கு

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார், கோவை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயக்குனராகப் பணியாற்றி வந்தார். சில காரணங்களால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 

இந்த நிலையில், பள்ளியின் மேலாண்மை இயக்குநர் என்று போலியான ஆவணங்களைத் தயார் செய்து, போலிக் கையெழுத்துப் போட்டு 45 பேருந்துகள் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அசோக்குமார் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோசடி வழக்கில் சிக்கியுள்ள அசோக்குமார், ஒரு பெண் எம்.எல்.ஏ.வின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி