கோவை: மலைப்பாதையில் யானைகள்..சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கை

வால்பாறை மலைப்பாதையில் யானைகள் அதிகளவில் நடமாடுவதால், சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பருவமழைக்குப் பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே இரவு நேரங்களில் யானைகள் சாலையைக் கடப்பது தொடர்ந்து நிகழ்கிறது. ஆழியாறு கவியருவி செல்லும் சாலையிலும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. 

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் வாகனங்களை மிகவும் மெதுவாக இயக்க வேண்டும். சாலையில் யானைகள் தென்பட்டால், உடனடியாக வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி, யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின் மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும். யானைகளுக்கு அருகில் செல்லவோ, செல்பி எடுக்கவோ கூடாது. வன உயிரின பாதுகாப்பு சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வனத்துறையின் இந்த எச்சரிக்கையை கடைபிடித்து, பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி