கோவை: தேர்தல் சுற்றுப்பயண பிரச்சார வாகனம் தொடக்கம்

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7ம் தேதி மேட்டுப்பாளையம் தொகுதியிலிருந்து தொடங்க உள்ளார். அதற்கான பிரச்சார வாகனத்தை கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையொட்டி அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், தொண்டர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டார் என்பதால், மக்களிடையே அவருக்கு அதிக வரவேற்பு இருக்கும் எனவும் கூறினார்.

மேலும், ஜெயலலிதா 2010ல் கோவையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது அ.தி.மு.க 200 தொகுதிகளில் வென்றது போன்று, பழனிச்சாமியின் இந்த பயணமும் 2026ல் அ.தி.மு.க வெற்றிக்கு துவக்கமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி