கோவை: சாட்சி சொல்ல மறுத்ததால் கொலை மிரட்டல்

கோவையில் சாட்சி சொல்ல மறுத்த வாலிபரை இரண்டு பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கெம்பட்டி காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (23) என்பவர் செட்டி வீதியில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் லிங்கேஸ்வரன் (24) ஆகியோர் பாலகிருஷ்ணனிடம் ஒரு வழக்கில் தங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு பாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து பாலகிருஷ்ணன் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லிங்கேஸ்வரனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி