கோவை: பள்ளி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டி

கோவை சாய்பாபா காலனி அழகேசன் சாலையில் உள்ள டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ராமலிங்க செட்டியார் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ ஜெயந்திரா சரஸ்வதி வித்யாலயம் பள்ளி என 4 அணிகள் பங்கேற்றன. 

இந்த போட்டியை ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கிவைத்து போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். கிரிக்கெட் போட்டி துவங்கியதும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் போட்டியில் விளையாடும் மாணவிகளைக் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியின் நிறைவில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவிகள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டிவருவதாகவும் இனிவரும் நாட்களில் வரவேற்பும் ஆர்வமும் அதிகரிக்கும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி