முதல் தர கொப்பரை 278 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு ரூ. 140 முதல் ரூ. 146.16 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை 246 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு ரூ. 80.15 முதல் ரூ. 120.52 வரையிலும் விலை கிடைத்தது.
இந்த வாரம் மட்டும் 30.18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 235.80 குவிண்டால் கொப்பரை ஏலத்துக்கு வந்துள்ளது. இந்த ஏலத்தில் 10 வியாபாரிகள் பங்கேற்றனர். கொப்பரை விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.