கோவை: ஆணையாளர் குப்பை வாகனத்தில் ஆய்வு!

கோவை மாநகராட்சி மத்திய மண்டல குப்பை மாற்று நிலையத்தை ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தில் பயணம் செய்து, திடக்கழிவு மேலாண்மை பணிகளை அவர் ஆய்வு செய்தார். தூய்மைப் பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று பதவியேற்ற நிலையில், கோவையில் துரிதமாக பணிகளைத் தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி