கோவை: ரயில் மோதி வியாபாரி பலி

கோவை வீரபாண்டியை சேர்ந்த குமார் (வயது 39) என்பவர், காய்கறி வியாபாரியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை 6 மணியளவில் வடகோவை–காரமடை அருகே ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது மேட்டுப்பாளையம் நோக்கி வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி