வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் மூடியில்லாத குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த 4 வயது குட்டியானையை வனத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைக் கூட்டம் தண்ணீர் குடிக்கும் போது குட்டியானை கால்தவறி 12 அடி ஆழமான தொட்டிக்குள் விழுந்தது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் தொட்டியின் ஒரு பக்க சுவர் உடைக்கப்பட்டு, மதியம் 1 மணியளவில் குட்டியானை பாதுகாப்பாக வெளியேறியது.