கோவை: மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு!

பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவரின் கோவை மக்கள் சேவை மையம் எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் , மத்திய அரசு சார்பில் மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமரின் கனவு திட்டமான ட்ரோன் டிடி எனும் திட்டம் மூலம் கிராமப் புற பெண்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம் இங்கு நடத்தப்படுகிறது. தி. மு. க வின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று உள்ளது. அதில் மத்திய அரசை குற்றம் சாட்டி பல்வேறு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக புயல் பாதிப்பிற்கான நிவாரணம் வழங்கவில்லை, டங்ஸ்டன் எடுக்க பா. ஜ. க துணை நிற்கிறது என பொய்யான குற்றச்சாட்டுகள் அதில் உள்ளன. மத்திய அரசின் திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் வழங்கிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தும் போது திட்டத்தை எதிர்த்து வருகிறது தி. மு. க அரசு என பேசினார்.

தொடர்புடைய செய்தி