கோவை: ஆட்டோ விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை, குனியமுத்தூர், விஜயலட்சுமி மில் அருகே நேற்று அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயலட்சுமி மில் அருகே கார் ஒன்று திரும்ப முயன்றபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ ஓட்டுநர் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஆட்டோ தானாகவே சாலையோரம் சென்று நின்றது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இருப்பினும், அதிவேகமாக ஆட்டோவை இயக்கியதே விபத்துக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்து குறித்து குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி