கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் அந்தஸ்து, ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியல் தொடர்ந்ததால், சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என கருதி பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் பரபரப்பு நிலவியது.