கோவை போத்தனூர் அருகே தேவசகாயம் நகரில் சாந்தி (60) என்பவர் நடத்தி வரும் நோட்டு, பேனா கடையில், நோட்டு, பேனா வாங்குவது போல் வந்த வாலிபர் ஒருவர், சாந்தி அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். தள்ளுமுள்ளுவில் சங்கிலி 2 துண்டாக அறுந்து, 2 பவுன் தங்க சங்கிலியுடன் வாலிபர் தப்பிச் சென்றார். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.