கோவை: அம்மா நினைவுக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவக்கம்

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உலியம்பாளையம் பகுதியில் 5ஆம் ஆண்டு அம்மா நினைவுக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இந்தப் போட்டியைத் துவக்கி வைத்து, வீரர்களுடன் இணைந்து விளையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு நினைவுப் பரிசும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு எஸ். பி. வேலுமணி கோப்பைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி