தற்போது வால்பாறை பணிமனையில் இருந்து கோவை, பொள்ளாச்சி, பழனி, மன்னார்குடி, சேலம், திருப்பூர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு 42 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பல பழைய பேருந்துகளுக்கு பதிலாக தற்போது 7 புதிய பேருந்துகள் வந்துள்ளன. கிளை மேலாளர் சதீஷ் கூறுகையில், இந்த புதிய பேருந்துகள் அனைத்தும் எஸ்டேட் வழியாக வால்பாறைக்கும், அங்கிருந்து பொள்ளாச்சிக்கும் இயக்கப்படும். மேலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை, திருச்சி போன்ற வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகளாகவும் இயக்கப்படும். பழைய பேருந்துகள் அனைத்தும் திரும்ப அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெகவில் இருந்து விலக இதுதான் காரணம்