கோவை: 22 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது!

கோவை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மொத்தம் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் போலீசார் மாதம்பட்டி சாலை அருகே நடத்திய சோதனையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணு சரண் பிரதான் மற்றும் நஹு பிரதான் ஆகியோரை கைது செய்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரயில்வே நிலையம் அருகே நடத்திய சோதனையில் ஜஷோபந்தா பிரதான், கைசர் பிரதான், பாபுலு பிரதான் ஆகியோரிடம் இருந்து 12 கிலோ கஞ்சா நேற்று பறிமுதல் செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி