கோவையில் வாலிபர் திடீர் சாவு

கோவை துடியலூர் அருகே உள்ள வேடப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(36). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதேபோல் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி