தொண்டாமுத்தூர்: கஞ்சா விற்ற அண்ணன் தம்பி கைது

தொண்டாமுத்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புத்தூர் புதுக்காலனி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (24) மற்றும் அவரது தம்பி மணிகண்டன் (22) என தெரியவந்தது. இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டாமுத்தூர் போலீசார் இருவரையும் இன்று கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி