சோமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற தலித் மக்களுக்கு நிலப் பட்டா வழங்கக் கோரி, சூலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மனு அளித்தனர். மக்கள் விடுதலை முன்னனி மாநில ஒருங்கிணைப்பாளர் U. P. ராசு மற்றும் நீலம் சட்ட மையம் சார்பாக செ. சூர்யகுமார் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து வட்டாச்சியரை சந்தித்து, நிலமற்ற தலித் மக்களின் வாழ்நிலை மற்றும் நீண்டகால நிலத் தேவையை விளக்கினர். மனுவைப் பெற்ற வட்டாச்சியர், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.