போத்தனூர்-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் போத்தனூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் (06115) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறு நாள் (15-ந்தேதி) காலை 11.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை- போத்தனூர் சிறப்பு ரயில் (06166) 15-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (16-ந்தேதி) இரவு 7.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

தொடர்புடைய செய்தி