கோவை விமான நிலையத்தில் எஸ்.பி.வேலுமணி சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும், தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது திமுக எதிர்ப்பு என்ற காரணத்திற்காக என குறிப்பிட்ட அவர் தவெக அரசின் தவறுகளையும் விமர்சித்து வருவதாக கூறியுள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற விரும்பியதாக பலரும் தங்களை குறித்து அவதூறு பரப்பியதாகவும் தெரிவித்தார். கோவை சிறுமி கொலை போன்ற சம்பவங்கள் நடக்காமல் அரசு சட்டம் ஒழுங்கை கையாள வேண்டும் என்றும் கூறினார்.