கோவை: மசாஜ் சென்டரில் விபசாரம்.. பெண்கள் உட்பட 5 பேர் கைது

கோவை சுந்தராபுரம் சிக்னல் அருகே உள்ள ஒரு காம்ப்ளக்சில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மசாஜ் என்ற பெயரில் பல இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விபசார புரோக்கர் மதுக்கரை அறிவொளி நகரை சேர்ந்த ராஜீவி (30) மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிரா, கோவை, திருப்பூரை சேர்ந்த 4 இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி