பெட்ரோல் பங்கில் பணம் கொடுக்காமல் தப்பி சென்ற நபர் சிசிடிவி

காருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற நபர் - காரை துரத்தும் பங்கின் பெண் ஊழியரின் சிசிடிவி காட்சிகள்.

கோவையில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை புட்டுவிக்கி பகுதியில் ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மதியம் பெட்ரோல் நிரப்புவதற்காக ஸ்விஃப்ட் காரில் 25வயது மதிக்கத்தக்க நபர் வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த பங்கின் பெண் ஊழியரிடம் 3 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பும் படி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பெட்ரோல் நிரப்பிய பின் பணம் கொடுக்காமல் கண்ணிமைக்கும் நேரத்தில் காரை எடுத்து தப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து பங்கின் ஊழியர் கூச்சலிட்டபடி பின் தொடர்ந்து ஓடவே கார் நிற்காமல் சென்றுள்ளது. அங்கிருந்த சக் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்து துரத்தவே அதற்குள் காரில் சென்ற நபர் மாயமாகியுள்ளர்.

இதனை தொடர்ந்து பங்கின் ஊழியர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் ஏமாற்றி சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி