கோவை: அதிவேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட வாலிபர்

கோவை மாதம்பட்டி அருகே தொண்டாமுத்தூர் சாலையில் மே 18 இரவு அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரூர் போலீசார் காரின் பதிவு எண்ணின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி