கோயம்புத்தூர், நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

கோயம்புத்தூர், நீலகிரி உள்பட தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று (நவம்பர் 13) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி