அதே போல் தொண்டாமுத்தூர் விராலியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கார்த்திக் (வயது 24), கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறையினருடன் இணைந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக யானை கார்த்திக்கைத் தாக்கத் துவங்கியது. இதில் படுகாயமடைந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகனை இழந்து வாழும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்த எஸ்.பி. வேலுமணி நேற்று (செப்.,21) அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியையும் வழங்கினார். வழங்கினார்.